சீயோல்: கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், 2வது இடத்தில் இருந்த தென்கொரியா, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, தற்போது, 9வது இடத்துக்குச் சென்றுள்ளது.
சவுதி அரேபியாவில் கடந்த 2012ம் ஆண்டு உருவான மெர்ஸ் (MERS - Middle East respiratory syndrom) என்ற சுவாசத் தொற்று நோய், தென்கொரியா உட்பட, 21 நாடுகளுக்குப் பரவியது. சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்த நோயால் அதிக மக்களைப் பலி கொடுத்த நாடாக தென்கொரியா இருந்தது.இதனால், தென்கொரியாவில் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையங்களை அதிநவீனப் படுத்த சிறப்புத் துறை அமைத்தனர். பல்வேறு நோய்க் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்தனர். அந்த மையங்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படவர்களை சோதனை செய்ய பேருதவி செய்து வருகின்றன.