புதுடில்லி: கொரோனா வைரசை, 'சீன வைரஸ்' என சிலர் கூறுவதை இந்தியா எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக சீனா கூறியுள்ளது.
கொரோனா வைரஸ், முதல் முதலில் சீனாவில் தென்பட்டது. அது தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரசை, 'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ, சமீபத்தில், நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருடன், தொலைபேசியில் பேசினார். அப்போது, 'இந்த வைரசை, சீன வைரஸ் என, சில குறுகிய மனப்போக்கு உள்ளவர்கள் கூறி வருகின்றனர். இதை, இந்தியா எதிர்க்கும் என, எதிர்பார்க்கிறோம்' என, வாங்க் யீ குறிப்பிட்டார்.